வல்லிய என் விரல்களும்
வலிமை இழந்து போகின்றன
அவளின் மெல்லிய விரல்கள்
என் விரல்களின் இடையில் இடம் பிடிக்கையில்
அவள் தோள் சாய்ந்து
நித்திரை கொள்கையில்
மென்மையின் மென்மை உணர்கிறது மேனி
அவளைக் கண்டால்
குழம்பியிருக்கும் மனமும் குழந்தையாகிறது
சினம் வழியும் விழியும் சாந்தமடைகிறது
என் கன்னமும் அவள் உதடும் உறவு கொள்கையில்
அவள் உதடுகள் உதிர்க்கும் புன்முறுவலில்
புதைகிறது என்னுள் படர்ந்த சோகம்
அவள் தத்தி தத்தி நடக்கும் நடையிலும்
அழகாய் மொழியும் மழலையிலும்
மனதில் மண்டிய கவலை மறைந்து
மகிழ்ச்சி மலர்கிறது
அடிப்பதாய் நினைத்து
அழகாய் அவள் தொடுவதில்
வலிப்பதாய் நான் செய்யும் பாசாங்கில்
மலரும் புன்னகையில்
மறந்துதான் போகிறேன்
அவள் என் மகளென்பதையே..
3 comments:
really very nice..
நன்றி லக்ஷ்மி.
வணக்கம்
உங்கள் வலைத்தளம் மிக அருமை...
ரசிக்கும் படியாக இருந்தது.. வாழ்த்துக்கள்...
http://ivalbharathi.blogspot.com
http://ivaldevathai.blogspot.com
என் வலைதள முகவரி மேற்கண்டது..
பார்த்துவிட்டு சொல்லவும்..
நன்றி..
நட்புடன்,
இவள் தேவதை பாரதி
Post a Comment