நினைவுகள் முழுவதும் அவளிருக்க கனவெதற்கு?
உறக்கத்தில் இமை மூடி
அவளின் நினைவிழக்க விரும்பாத நான்
உறக்கத்தை கூட உறங்கவைத்து விடுகிறேன்
தூங்கினால் அவளின் நினைவும் தூங்கிவிடும் என்பதற்காக
தூக்கத்தை துரத்தி விடுகிறேன்
அவள் கண்கள் என்ன கயல்களா?
என் நினைவுகளில் நீங்காமல் நீந்திக்கொண்டிருக்கின்றன
இந்த உலகிற்கு அவள் கவினை
கவியால் கற்பிக்க முயல்கிறேன் முடியவில்லை
புன்னகை ஏந்திய அவள் செவ்விதழ்கள் விரியும் போது
சந்தேகம் உதிக்கிறது
பூப்பது புன்னகையா இல்லை பூவா என்று
ஈர்ப்பு விசை கொண்ட அவள் விழியால்
ஈர்க்கப்பட்ட என் விழியிலும் நினைவிலும்
அவள் உருவம் மட்டுமே மிஞ்சுகிறது…
Wednesday, July 9, 2008
நினைவானவள்...
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Wow.. sooper.. yaaru antha inspiration nu sollu pa...
Post a Comment